ஆண்டுகள் போயின, வந்தன
விதவிதமான பலன்கள் தந்தன
வண்ணப்பூக்கள் கோடி மலர்ந்தன
இன்பம் தந்து பின் உலர்ந்தன
பற்பல நல்லவை நடந்தன
சிற்சில சோதனைகள் கடந்தன
கதவுகள் பல திறந்தன
துன்பங்கள் பெரிதும் பறந்தன
நல்ல நினைவுகள் உறைந்தன
கெட்ட நினைவுகள் மறைந்தன
தடைக்கற்கள் தடுத்து அகன்றன
பாடங்கள் நமக்குப் பகன்றன
இன்னுமோர் புத்தாண்டு: நந்தன
இன்னிசையோடு வரவேற்போம்: தந்தன தந்தன தந்தன...